நாசா, விரைவில் தனது சப் ஆர்பிட்டல் விமான சேவையை தொடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், 2 மணி நேரத்திற்குள் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கான்கார்டு என்ற பெயரில் ஒலியை விட இரு மடங்கு வேகமாக பயணிக்கும் விமானத்தை நாசா அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலம், 3 மணி நேரத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும். ஆனால், இந்த விமானத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் அதிக செலவானதால், விமான சேவை இயக்கப்படுவது சவாலானதாக இருந்தது. அத்துடன், கடந்த 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து இந்த விமான சேவையை முழுவதுமாக நிறுத்தியது.
தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு கான்கார்டு விமானத்தின் அடுத்த வெர்ஷன் ஆக X 59 சப் ஆர்பிட்டல் விமானம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த விமானம் மூலம், 2 மணி நேரத்தில் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை விரைவில் அறிமுகம் ஆகும் பட்சத்தில், உலகளாவிய பயண நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றம் மற்றும் தாக்கம் ஏற்படும் என கருதப்படுகிறது.