சூடான் - துணை ராணுவம் பிடித்து வைத்திருந்த 125 ராணுவ வீரர்கள் விடுவிப்பு

June 30, 2023

சூடானில், கடந்த 3 மாதங்களாக துணை ராணுவம் மற்றும் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு போரில், ராணுவத்தை சேர்ந்த பல வீரர்களை துணை இராணுவப் படையினர் பிடித்து வைத்திருந்தனர். தற்போது, அவர்களில் 125 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. செஞ்சிலுவை சங்கம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அத்துடன், செஞ்சிலுவை சங்கத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்டு இருந்த 125 வீரர்களில் 44 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் சூடான் தலைநகர் […]

சூடானில், கடந்த 3 மாதங்களாக துணை ராணுவம் மற்றும் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு போரில், ராணுவத்தை சேர்ந்த பல வீரர்களை துணை இராணுவப் படையினர் பிடித்து வைத்திருந்தனர். தற்போது, அவர்களில் 125 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. செஞ்சிலுவை சங்கம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அத்துடன், செஞ்சிலுவை சங்கத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்டு இருந்த 125 வீரர்களில் 44 பேர் காயமடைந்திருந்தனர். அவர்கள் சூடான் தலைநகர் கார்ட்டூமிலிருந்து வாட் மடானி நகருக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அவர்கள் எந்த பகுதியில் சிறை வைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருவதால், சூடானில் பதற்றம் நிலவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu