ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் தப்பிய பயங்கரவாதியை தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக இது போன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது














