குஜராத்தில் 2 இடங்களில் திடீர் நிலநடுக்கம்

January 30, 2023

குஜராத்தில் 2 இடங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 6.38 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துதாய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் வடக்கு-வடகிழக்கே பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. அதற்கு முன்னதாக அதிகாலை 5.18 மணியளவில் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கங்களால் உயிர் […]

குஜராத்தில் 2 இடங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 6.38 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துதாய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் வடக்கு-வடகிழக்கே பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. அதற்கு முன்னதாக அதிகாலை 5.18 மணியளவில் கவ்டா கிராமத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கங்களால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu