அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது.
அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பெரும்பாலும் அல்ட்ரா டீலக்ஸ் வகையை சேர்ந்த இரண்டு இருக்கைகள் கொண்டதாக உள்ளது. இதில் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் மாறுதலாக கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூபாய் 5 முதல் 30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர், ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் அரசு பஸ்களில் ஏதும் கட்டண மாற்றம் ஏற்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்பட்டு வருகின்றது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.