தூத்துக்குடியில் உப்பின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக பெருமளவு உப்பளங்கள் வெள்ளத்தால் மூழ்கி பாதிப்பு உண்டானது. இதனால் இந்த ஆண்டு உப்பின் உற்பத்தி தாமதமாக தொடங்கியது. மேலும் தற்போது திடீரென உப்பின் விலை தூத்துக்குடியில் உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஒரு டன் உப்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு டன் நான்காயிரம் வரை விற்பனை ஆகிறது. புதிதாக தயாரிக்கப்படும் உப்பு 1500 முதல் 2000 வரை விற்பனை ஆகிறது. உப்பு விலை உயர்வதால் தூத்துக்குடியில் உப்பு இறக்குமதி செய்யும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தற்போது குஜராத்திலிருந்து இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.