பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 910 புள்ளிகள் உயர்வு

February 4, 2023

நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 909.64 புள்ளிகள் உயர்ந்து, 60841.88 ஆக நிலை பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 3 மட்டுமே நஷ்டத்தை சந்தித்தது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 243.65 புள்ளிகள் உயர்ந்து 17854.05 ஆக நிலை கொண்டது. வியாழனன்று, அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருந்தது. அதன் எதிரொலியாக நேற்றைய இந்திய பங்குச் […]

நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 909.64 புள்ளிகள் உயர்ந்து, 60841.88 ஆக நிலை பெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில், 3 மட்டுமே நஷ்டத்தை சந்தித்தது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 243.65 புள்ளிகள் உயர்ந்து 17854.05 ஆக நிலை கொண்டது.

வியாழனன்று, அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருந்தது. அதன் எதிரொலியாக நேற்றைய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அதானி குழும நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து கடன் தர நிர்ணய நிறுவனங்கள் அளித்துள்ள சான்று, விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடம் காணப்பட்ட ஆர்வம் ஆகியவை சந்தையை மேல் நோக்கி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில், சந்தை மூலதன மதிப்பு ஒரு லட்சம் கோடி உயர்ந்து, 266.73 லட்சம் கோடியாக பதிவானது. மேலும், நேற்றைய வர்த்தகத்தில், வங்கித்துறை பங்குகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. முன்னணி 12 வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீடு 830.40 புள்ளிகள் உயர்ந்து 41499.7 ஆக நிலை பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu