இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மாநிலங்களவை எம்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவரை ஜனாதிபதி திரௌபதி முர்மு மாநிலங்களவை எம்பியாக நியமித்திருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் சமூக சேவை மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழ்ந்துள்ளார். அவரது பாராளுமன்ற பதவி காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.