சுகன்யான் சோதனை ராக்கெட் வருகின்ற 21ஆம் தேதி விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.இஸ்ரோ நிறுவனம் விண்ணிற்கு மனிதர்களை அனுப்புவதற்காக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் விண்ணில் 400 கிலோமீட்டர் சுற்று வட்ட பாதைக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை வருகிற 21ஆம் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுத்தளத்தில் டிவி - டி 1 ராக்கெட் மூலம், விண்வெளி வீரர்கள் ஆபத்தான நிலையில் தப்பிக்கும் வசதியுடன் உள்ள அமரும் பகுதியை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளனர். இதன் மூலம் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக இலக்கு சென்று மீண்டும் தரையிறங்குகிறதா என சோதித்துப் பார்க்க பட இருக்கின்றது. இது 17 கிமீ உயரத்தில் சென்று வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து வங்கக்கடலில் தரையிறக்க படும். மேலும் கடலில் விழுந்த உடன் இதனை இந்திய கடற்படை சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீண்டும் இஸ்ரோவின் வசம் இதனை ஒப்படைப்பார்கள்.