அமிர்தசரஸ் பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நாராயண் சிங் சௌரா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் மீது அகல் தக்த் தண்டனை விதித்திருந்தது. அதன்படி, தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.