மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் விபத்து - ஒருவர் பலி

January 28, 2023

இந்திய விமானப் படையைச் சேர்ந்த சுகோய் 30 எம் கே ஐ மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மோரேனா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை வழக்கமாக நடைபெறும் பயிற்சியின்போது விபத்து நேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாகவும், இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த விமானி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இரு விமானங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி இருக்கலாம் என […]

இந்திய விமானப் படையைச் சேர்ந்த சுகோய் 30 எம் கே ஐ மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மோரேனா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை வழக்கமாக நடைபெறும் பயிற்சியின்போது விபத்து நேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாகவும், இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த விமானி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இரு விமானங்களும் ஒன்றுடன் மற்றொன்று மோதி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu