சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கு மே ஒன்றாம் தேதி முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாரம்தோறும் திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.