சன் பார்மா நிகர லாபம் 1985 கோடியாக உயர்வு

May 26, 2023

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், சன் பார்மா நிறுவனம் 1984.47 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 2277.25 கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் லாபம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை வேளையில், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 16726 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% உயர்வாகும். கடந்த காலாண்டில், சன் பார்மா நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு […]

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், சன் பார்மா நிறுவனம் 1984.47 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 2277.25 கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வருடம் லாபம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை வேளையில், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 16726 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% உயர்வாகும்.

கடந்த காலாண்டில், சன் பார்மா நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 2802.10 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எபிட்டா மார்ஜின் 25.6% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட் தொகையாக 4 ரூபாயை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக, நிறுவனத்தின் நிகர லாபம் 8474 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 160% உயர்வாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu