சுந்தரம் பைனான்ஸ் நிகர லாபம் 20% உயர்வு

May 27, 2023

சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனம், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மொத்தமாக 1088 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது 2022-ம் நிதி ஆண்டின் லாபத்தை விட 20% உயர்வாகும். மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், சுந்தரம் பைனான்ஸ் வழங்கிய மொத்த கடன் மதிப்பு 20966 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 58% உயர்வாகும். மேலும், சுந்தரம் பைனான்சால் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 17% உயர்ந்து, […]

சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனம், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மொத்தமாக 1088 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது 2022-ம் நிதி ஆண்டின் லாபத்தை விட 20% உயர்வாகும். மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், சுந்தரம் பைனான்ஸ் வழங்கிய மொத்த கடன் மதிப்பு 20966 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 58% உயர்வாகும். மேலும், சுந்தரம் பைனான்சால் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு 17% உயர்ந்து, 34552 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் காலாண்டு லாபம் 316 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள லாபத்தை விட 6% கூடுதலாகும். இதன்படி, தொடர்ந்து, சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் செயல்பாடுகள் உயர்வாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே, 2023 ஆம் நிதி ஆண்டுக்கு 150% ஈவுத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு 15 ரூபாய் டிவிடெண்ட் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu