சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் தனது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிறுவனத்தின் நிகர லாபம் 29% உயர்ந்து 215.81 கோடியாக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த 2022 மார்ச் மாத இறுதியில், 167.7 கோடி அளவில் லாபம் பதிவாகி இருந்தது. மேலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ம் காலாண்டில் மட்டும், நிகர லாபம் 24% உயர்ந்து, 65.68 கோடியாக பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், சுந்தரம் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்கிய மொத்த கடன் தொகை 70% உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் நிதி ஆண்டில் 2336.49 கோடியாக இருந்த கடன் தொகை, 2023 ஆம் நிதி ஆண்டில் 3978.41 கோடியாக அதிகரித்துள்ளது.