நாசாவின் பரிசோதனை வெற்றி - சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் திட்டத்தில் முன்னேற்றம்

இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் கலத்தின் சேவை மாடூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு மற்றும் தள்ளு விசை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த திட்டம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில், முக்கிய மற்றும் சவாலான பரிசோதனை ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொழில்நுட்ப பிரச்சனைகள் […]

இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் கலத்தின் சேவை மாடூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு மற்றும் தள்ளு விசை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த திட்டம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில், முக்கிய மற்றும் சவாலான பரிசோதனை ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொழில்நுட்ப பிரச்சனைகள் விரைவாக சரி செய்யப்பட்டு, அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu