விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் இன்று மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கும் திட்டத்தில் இவர் இன்று செல்ல இருந்தார். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஸ்டார் லைனர் என்ற விண்வெளி விண்கலத்தை உருவாக்கி வருகிறது. அந்த விண்கலம் முதல் முறையாக சோதனை முறையில் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஃப்ளோரிடா மாகாணத்தின் கேப் கணாவெரல் ஏவுதளத்தில் இருந்து இந்த ஸ்டார்லைனர் ஏவப்பட இருந்தது. சுனிதா வில்லியம்ஸூடன் பட்ச் வில்மோரும் செல்ல இருந்தார்.
இந்நிலையில், ஆக்சிஜன் குழாயில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா கூறி இருக்கிறது.