அமெரிக்கா - சூரிய புயலால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

நேற்று சூரியனில் உள்ள AR3296 கரும்புள்ளி வெடித்து சிதறியது. இதன் மூலம், சூரியனில் இருந்து வெளிப்பட்ட அபாயகரமான கதிர்கள் பூமியை தாக்கின. இது, M 1.5 ரக சூரிய புயல் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மிகவும் தீவிரமான சூரிய புயல் வகையை சார்ந்ததாகும். இதன் விளைவாக, மேற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கடலில் உள்ள கப்பல்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பூமியின் வளிமண்டலம் மற்றும் […]

நேற்று சூரியனில் உள்ள AR3296 கரும்புள்ளி வெடித்து சிதறியது. இதன் மூலம், சூரியனில் இருந்து வெளிப்பட்ட அபாயகரமான கதிர்கள் பூமியை தாக்கின. இது, M 1.5 ரக சூரிய புயல் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மிகவும் தீவிரமான சூரிய புயல் வகையை சார்ந்ததாகும். இதன் விளைவாக, மேற்கு அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, கடலில் உள்ள கப்பல்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலத்தில், இந்த தீவிர புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் உள்ள தாதுக்களை, சூரிய புயலின் போது ஏற்பட்ட புற ஊதா கதிர்கள் தாக்கி, பூமியில் உள்ள மின்னணு சேவைகளை பாதிப்படைய செய்துள்ளன. சூரிய புயல் சார்ந்த ஆய்வுகளில் நாசா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu