சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சூப்பர் எஸ் எஸ் மார்ட் என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், இணைய வழி வர்த்தகத்தில் கால் பதித்துள்ளது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் ஏற்கனவே முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், இணைய வழி சில்லறை வர்த்தகத்தில் களம் காண உள்ளது. ஆடைகள், ஆபரணங்கள், சமையலறை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் போன்றவை புதிய இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. திங்கட்கிழமை முதல் பரிசோதனை அடிப்படையில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் வழக்கமான பயன்பாடு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.