கடந்த 6 மாதங்களில் உலகளவில் ஏற்பட்ட முக்கியமான 6 சர்வதேச பதற்றங்களைத் தடுப்பதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய பங்கு வகித்ததாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்–ஈரான், தாய்லாந்து–கம்போடியா, அஜர்பைஜான்–ஆர்மீனியா, ருவாண்டா–காங்கோ, செர்பியா–கொசோவோ, எகிப்து–எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையில் உருவான போர்முனை நிலைகளை சமரசமாக தீர்த்து, மோதலைத் தவிர்த்ததற்காக டிரம்ப் பாராட்டப்படுகிறார். இதனைத் தொடர்ந்து, டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை தற்போது அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவும் முன்வைத்துள்ளன. இதன் மூலம், இந்த பரிசுக்கான ஆதரவு வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளும் இவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.