இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். கொலிஜியத்தின் பரிந்துரைப்படி, இவர்களின் நியமனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, தலைமை நீதிபதி சந்திர சூட், இருவருக்கும் நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை, மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு உத்தரவு பிறப்பித்தார். அதன் பின்னர், நேற்று, புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட அர்ஜுன் ராம் மேக் வால், நீதிபதிகளின் நியமனத்தை ட்விட்டரில் அறிவித்தார். இன்று, அவர்கள் இருவரும் நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று பதவியேற்றுள்ள விஸ்வநாதன், 2030 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் வாய்ப்பை பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.