குறுகிய கால பணித்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற விமானப்படையை சேர்ந்த 32 பெண் அதிகாரிகளுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி விமானப்படை மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய விமானப்படையில் எஸ்.எஸ்.சி., எனப்படும் குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், 1993 - 98 காலகட்டத்தில் 32 பெண் அதிகாரிகள் பணியில் சேர்ந்தனர். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ் இவர்கள் பணியாற்றியதால் இவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை. இந்த பலன்களை அளிக்ககோரி பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெண் அதிகாரிகளின் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி மத்திய அரசு மற்றும் விமானப்படைக்கு உத்தரவிட்டது.