அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு வருமானத்திற்கு அதிகப்படியான சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மற்றும் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் பொன்முடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.