'ஹிஜாப்' வழக்கை விசாரிக்க விரைவில் அமர்வு - உச்ச நீதிமன்றம்

January 24, 2023

'ஹிஜாப்' அணிந்து செல்வது தொடர்பான வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்தாண்டு கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, கர்நாடகா முழுதும் போராட்டங்கள் வெடித்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணியக் கூடாது. ஹிஜாப் அணிய கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' […]

'ஹிஜாப்' அணிந்து செல்வது தொடர்பான வழக்கை விசாரிக்க விரைவில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்தாண்டு கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவியர், 'ஹிஜாப்' அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக, கர்நாடகா முழுதும் போராட்டங்கள் வெடித்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை அணியக் கூடாது. ஹிஜாப் அணிய கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கடந்த அக்டோபரில் மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது முக்கியமான பிரச்னை. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். விரைவில் இதற்கான அமர்வு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu