மருந்துகள் பற்றாக்குறையால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு

February 13, 2023

மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறையால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கை, இன்னும் பொருளாதார பிரச்சினையில் இருந்து மீளவில்லை. அந்த நாடு, மருந்துப்பொருட்களுக்காக 85 சதவீதமும், மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80 சதவீதமும் வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டால் கடந்த ஆண்டு முதலே அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருந்துகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், ஆய்வகங்களுக்கான வேதிப்பொருட்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமல்லாத அறுவை […]

மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறையால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான இலங்கை, இன்னும் பொருளாதார பிரச்சினையில் இருந்து மீளவில்லை. அந்த நாடு, மருந்துப்பொருட்களுக்காக 85 சதவீதமும், மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80 சதவீதமும் வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டால் கடந்த ஆண்டு முதலே அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருந்துகள், அறுவைசிகிச்சை உபகரணங்கள், ஆய்வகங்களுக்கான வேதிப்பொருட்கள் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்படுவதாக சுகாதார மந்திரி கெகலிய ரம்புக்வெல்லா நேற்று அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தற்காலிமானதுதான் என்றும், அத்தியாவசியமான, அவசர அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து தடையின்றி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu