பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் புதிய நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சுரேந்தர் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது நியமனத்திற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி சதீஷ் குமார் குப்தா பணி ஓய்வு அடைந்தார். அதன் பின்னர், திபேந்திரா சிங் ரத்தோர் இடைக்கால தலைமை அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது, சுரேந்தர் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆர்பிஎல் வங்கியின் உயர் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஆர்பிஎல் வங்கிக்கு முன்னதாக, சுமார் 12 ஆண்டுகள் எச்டிஎப்சி வங்கியில் அவர் பணியாற்றியுள்ளார்.
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா, சுரேந்தர் சாவ்லாவின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவரது பணி அனுபவம், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.














