அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்-  உச்சநீதிமன்றம் 

February 23, 2023

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான […]

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 25 மாநில யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu