கடந்த புதன்கிழமை ஜார்ஜியா நாட்டில் ரஷ்ய பாணியில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, ஜார்ஜியா அதிபர் இந்த மசோதாவை ரத்து செய்துள்ளார்.
ஜார்ஜியா நாட்டில் இயங்கும் நிறுவனங்கள் 20% அளவுக்கு மேல் வெளி நாட்டினரிடம் இருந்து நிதி உதவி பெற்றால், வெளிநாட்டினர் நலனுக்காக இயங்கும் நிறுவனம் என பதிவு செய்யப்படும் - இதுவே அந்த மசோதா. அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை, ரஷ்ய பாணியில் நசுக்கும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜார்ஜியா பிரதமர் இராக்லி கேபாகிட்ஸே, நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார். ஆனால், தொடக்கம் முதலே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜார்ஜியா அதிபர் சரோமி சூரபிச்விலி, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவை ரத்து செய்துள்ளார்.