கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத் தை உலக மல்யுத்த சங்கம் இடை நீக்கம் செய்திருந்தது.
தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தாமல் தள்ளிவைக்கப்பட்டது என்பதால் உலக மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த சம்மேளன தை இடைநீக்கம் செய்தது. இதனை அடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத் தேர்தல் நடைபெற்றது. இதன் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தேசிய போட்டிகளை நடத்த முயற்சித்ததால் புதிய நிர்வாகத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அமைப்பு மல்யுத்த பணிகளை கவனித்து வந்தது. தற்போது இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது உலகம் மல்யுத்த சங்கம்.