தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு - முதல்வர் ஸ்டாலின் 

April 25, 2023

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய"2023 -ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு" நிறைவேற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 24-4-2023 அன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை […]

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய"2023 -ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு" நிறைவேற்றப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 24-4-2023 அன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu