தொடர் மழையின் காரணமாக வேதாரணியத்தில் உப்பு உற்பத்தி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுக்கா அகஸ்த்தியண் பள்ளி கோடிய காடு கடிநெல் வயல் பகுதியில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு கடல் போன்ற நீர் தேங்கியுள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த வாரம் வரை நடைபெற்ற உப்பு உற்பத்தி இந்த ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. மழையின் காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் மழைநீர் சாலைகளில் தேங்கி இருப்பதினால் உப்பு உற்பத்தியில் ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.