எஸ்யூவி வாகன விலைகளை குறைத்த டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா

July 12, 2024

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய வாகன நிறுவனங்கள் எஸ்யூவி ரக வாகனங்களை குறைத்து அறிவித்துள்ளன. பொதுமக்களிடையே எஸ்யூவி வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாலும், எஸ்யூவி வாகன விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கிலும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டாடா ஹாரியர் வாகனத்தின் ஆரம்ப விலை 14.99 லட்சமாகவும், டாடா சபாரி வாகனத்தின் ஆரம்ப விலை 15.49 லட்சமாகவும் குறைக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற எஸ் […]

டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய வாகன நிறுவனங்கள் எஸ்யூவி ரக வாகனங்களை குறைத்து அறிவித்துள்ளன. பொதுமக்களிடையே எஸ்யூவி வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாலும், எஸ்யூவி வாகன விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கிலும், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டாடா ஹாரியர் வாகனத்தின் ஆரம்ப விலை 14.99 லட்சமாகவும், டாடா சபாரி வாகனத்தின் ஆரம்ப விலை 15.49 லட்சமாகவும் குறைக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற எஸ் யு வி ரக வாகனங்களுக்கு 1.4 லட்சம் வரை சலுகை வழங்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எக்ஸ்யூவி 700 வரிசையைச் சேர்ந்த ஏ எக்ஸ் 7 வாகனத்தின் ஆரம்ப விலை 19.49 லட்சம் ஆக குறைக்கப்படுகிறது. இது தவிர எக்ஸ்யூவி ரக வாகன விலைகளில் 2 லட்சம் வரை விலை குறைப்பு செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu