ஜூன் 8ம் தேதி அரியணை ஏறுகிறார் நரேந்திர மோடி

வரும் ஜூன் 8ம் தேதி, 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அரியணை ஏறுகிறார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 இடங்களை பெறுவதில் பாஜக தோல்வியுற்றது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சி அமைக்கப்படுகிறது. அதன்படி, நடப்பில் உள்ள […]

வரும் ஜூன் 8ம் தேதி, 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அரியணை ஏறுகிறார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 இடங்களை பெறுவதில் பாஜக தோல்வியுற்றது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சி அமைக்கப்படுகிறது. அதன்படி, நடப்பில் உள்ள 17 வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பரிந்துரை கடிதம் வழங்கினார். அப்போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய அரசு அமையும் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்குமாறு நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu