வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

October 5, 2023

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றோர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி கூறி இருப்பதாவது, நானோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான குவாண்டம் டாக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர் மின்னணு துறையில் புரட்சிகள் ஏற்படுத்திய அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மவுங்கி பவன்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த லூயி ப்ரூஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலசி […]

வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றோர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி கூறி இருப்பதாவது, நானோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான குவாண்டம் டாக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர் மின்னணு துறையில் புரட்சிகள் ஏற்படுத்திய அமெரிக்காவின் எம் ஐ டி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மவுங்கி பவன்டி, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த லூயி ப்ரூஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலசி எக்மோர் ஆகிய மூவருக்கும் வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.இந்த மூன்று பேரின் பெயர்களை வேதியல் துறையில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோகன் ஆக்குவேஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுவாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை வரிசைக்கு தகுதியானவர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை ஸ்வீடிஷ் நாளிதழ் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu