ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்துள்ளார்.
ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் இந்திய வீரர் சுமித் நாகல் மற்றும் அர்ஜென்டினாவின் மரியானா நாவோன் மோதினர். இதில் சுமித் நாகல் 4-6,2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது சுற்றில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் மரியானா நாவோன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்