ஸ்விக்கி நிறுவனம், தனது நிர்வாகக் குழுவில், 3 சுயாதீன இயக்குனர்களை நியமித்துள்ளது. டெல்ஹிவெரி நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாகில் பருவா, டி ஏ எஃப் இ டிராக்டர் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மல்லிகா ஸ்ரீனிவாசன் மற்றும் பிரபல பட்டய கணக்காளர் சைலேஷ் ஹரிபக்தி ஆகியோர் சுயாதீன இயக்குனர்களாக ஸ்விக்கியில் இணைந்துள்ளனர். வர்த்தகத் தொழில் பிரிவில் அவர்களுடைய அனுபவம் ஸ்விக்கி நிறுவனத்திற்கு பெரிதும் துணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி நிர்வாகக் குழுவில் சுயாதீன இயக்குனர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஸ்விக்கி நிர்வாகக் குழுவில், அதன் இணை நிறுவனர்கள் ஸ்ரீ ஹர்ஷா மஜட்டி, நந்தன் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், புரோசஸ் குழுமத்தை சேர்ந்த லாரி இல்க், அசுதோஷ் ஷர்மா ஆகியோரும், ஆனந்த் டேனியல், சுமிர் ஜுனேஜா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், சுயாதீன இயக்குனர்கள் நியமிக்கப்பட்டது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.