ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு, ஸ்விக்கி தளத்தை பயன்படுத்துவதற்கான பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில், ஸ்விக்கி தளத்தை பயன்படுத்துவதற்கான பிளாட்பார்ம் கட்டணம் 5 ரூபாயாக உள்ளது. இது, இரு மடங்காக, 10 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. நிறுவனத்தின் இழப்புகளை ஈடு கட்டுவதற்காக இந்த கட்டண உயர்வு விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில் இது நிகழலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஸ்விக்கி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அதே வேளையில், ஒரு பில்லியன் டாலர்கள் நிதி திரட்டும் முயற்சியில் ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.