பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, புதிதாக ஹாண்ட்பிக்ட் (HandPicked) என்ற பிரீமியம் வகை மளிகை பொருள் விநியோக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இதற்கான முதல் கட்ட சோதனை வர்த்தக முயற்சி பெங்களூரு நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாண்ட்பிக்ட் தளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, கொக்கோ கோலாவின் செரி கோலா, குஜராத்தின் மேத்தி காக்கரா, உடனடியாக சமைப்பதற்கு தயாராக உள்ள இத்தாலி, ஜெர்மனி மற்றும் மெக்சிகோ நாட்டு உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம், இன்ஸ்டா மார்ட் என்ற பெயரில் துரித வர்த்தகத் தளம் ஒன்றை இயக்கி வந்தது. இதில், மளிகை பொருட்களுக்கு, உடனடி விநியோக சேவை வழங்கப்பட்டது. இதற்கு மாறாக, ஹாண்ட்பிக்ட் தளத்தில், இன்றைக்கு ஆர்டர் செய்தால் மறுநாளே பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.