பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் 400 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்விகி எனப்படும் பிரபல உணவு டெலிவரி நிறுவனம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. தற்போது மீண்டும் இந்த நிறுவனம் பணியாளர்களில் 7 சதவீதம் அதாவது 400 பணியாளர்களை பணி நீக்க செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக செலவுகளை குறைக்க பேடிஎம் மற்றும் பிளிப் கார்ட் போன்ற நிறுவனங்களுடன் ஸ்விகி நிறுவனம் இணைய உள்ளது. இதனை தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் உணவு விநியோக சந்தையில் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அதன் அடிப்படையில் செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.














