பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஸ்விக்கி நிறுவனம், ஐபிஓ வெளியிட திட்டமிட்டு இருந்தது. இந்த சூழலில், நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஐ பி ஓ வெளியிடுவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனம் ஐபிஓ மூலம் 3750 கோடி மதிப்பில் புதிய நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை செபியிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, ஸ்விக்கி நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற பங்குதாரர்கள் சந்திப்பில் இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே, ஐபிஓ ஆவணங்களை ஸ்விக்கி நிறுவனம் விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ பி ஓ வுக்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து 750 கோடி திரட்ட ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது.