ஸ்விக்கியில் 250 பேர் பணி நீக்கம்

December 9, 2022

ஸ்விக்கி நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில், ஸ்விக்கி நிறுவனம் 3 - 5% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி, செயல்பாடுகள் துறை, வாடிக்கையாளர் சேவை துறை, தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றில் பணி செய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. செயல்திறன் அடிப்படையில் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

ஸ்விக்கி நிறுவனம் 250 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில், ஸ்விக்கி நிறுவனம் 3 - 5% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. நிறுவனத்தின் விநியோகச் சங்கிலி, செயல்பாடுகள் துறை, வாடிக்கையாளர் சேவை துறை, தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றில் பணி செய்யும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

செயல்திறன் அடிப்படையில் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே, அக்டோபர் மாதத்தில், ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடு கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஸ்விக்கி நிறுவனம், 315 மில்லியன் டாலர்கள் இழப்பை சந்தித்துள்ளதாக ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது. எனவே, இழப்புகளை ஈடு கட்ட, பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu