இருமடங்கு நஷ்டத்தில் ஸ்விக்கி - 2022 ம் நிதியாண்டில் 3629 கோடி நஷ்டம்

January 3, 2023

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, 2022 ஆம் நிதியாண்டில், இரு மடங்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இழப்பு 3628.9 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 124% உயர்ந்து, 5704.9 கோடியாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, 2022 ம் நிதியாண்டில், இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் துரித வணிக செயல்பாடுகளில் ஸ்விக்கி நிறுவனம் இறங்கியது. இதன் மூலம், 2036 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனம், கிளவுட் கிச்சன் துறையில் 2022 ஆம் நிதியாண்டில் […]

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, 2022 ஆம் நிதியாண்டில், இரு மடங்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் இழப்பு 3628.9 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருவாய் 124% உயர்ந்து, 5704.9 கோடியாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, 2022 ம் நிதியாண்டில், இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் துரித வணிக செயல்பாடுகளில் ஸ்விக்கி நிறுவனம் இறங்கியது. இதன் மூலம், 2036 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஸ்விக்கி நிறுவனம், கிளவுட் கிச்சன் துறையில் 2022 ஆம் நிதியாண்டில் அதிக கவனம் செலுத்தியது. ஹோம்லி பவுல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட கிளவுட் கிச்சன் நிறுவனங்களில் அதிக முதலீடுகளை செய்தது. இதன் வாயிலாக 87.50 கோடி ரூபாய் வருவாய் பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஸ்விக்கி நிறுவனம், விளம்பரத்திற்காக மட்டுமே 1848.7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், செலவுகளை குறைக்கும் பொருட்டு, ஸ்விக்கி நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu