சிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

August 13, 2024

சிரியாவில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியாவில் ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஹமா நகர் மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.56 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பு தான் 3.7 என்ற ரிக்டர் […]

சிரியாவில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிரியாவில் ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஹமா நகர் மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.56 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பு தான் 3.7 என்ற ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. என்றபோதிலும், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu