சிரியா - ராணுவ அகாடமியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 89 பேர் பலி

October 7, 2023

சிரியாவில் உள்ள ராணுவ அகாடமி ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், 89 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சிரியாவில், 12 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹம்ஸ் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழா நிறைவடைந்த சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில், சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அலி மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவர் வளாகத்தில் […]

சிரியாவில் உள்ள ராணுவ அகாடமி ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், 89 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சிரியாவில், 12 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹம்ஸ் நகரில் உள்ள ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழா நிறைவடைந்த சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில், சிரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அலி மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவர் வளாகத்தில் இருந்து கிளம்பிய பிறகு இந்த தாக்குதல் நடந்ததால், அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 89-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 270 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடூரமான இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என சிரியா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu