நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதியது.
இந்தியா - தென்னாபிரிக்கா அணிகள் இடையே டி20 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன்னதாக 17 வருடங்களுக்கு முன்பு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இரண்டாவது முறையாக தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உலக கோப்பை 2024 இல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூபாய் 125 கோடி பரிசு தொகையை அறிவித்துள்ளார்