டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கலங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வீரர்கள் களமிறங்கினர். ஆனால் ஆஸ்திரேலியா அணியினால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதன்படி இந்தியா ஆறு புள்ளிகள் உடன் தனது பிரிவில் முதல் இடத்தை பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது