டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை பெற்றது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 182 என்று இலக்குடன் களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களில் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது