தைவான் நாடு அமெரிக்காவுடன் நெருக்கம் காண்பிக்க தொடங்கியதில் இருந்து, சீனா - தைவான் இடையிலான மோதல் வலுத்து உள்ளது. கடந்த வாரம் தைவான் அதிபர் அமெரிக்கா சென்று முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தைவான் எல்லையில், சீனா ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. தற்போது, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒத்திகை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, இன்று காலை நிலவரப்படி, கிட்டத்தட்ட 59 போர் விமானங்களும், 11 போர்க்கப்பல்களும் தைவானை சூழ்ந்து கொண்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இது தைவானை முற்றிலுமாக முற்றுகையிட்டது போல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.