தைவானில் உள்ள செமிகண்டக்டர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தைவானின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடங்க திட்டமிட்டு வருகின்றன. இதுகுறித்து தைவானின் தேசிய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் காவோ ஷீன் குயி கூறுகையில், தைவானின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது வினியோக சங்கிலியை வலுப்படுத்த இந்திய சந்தையை நோக்கி திரும்பி உள்ளன. செமிகண்டக்டர்கள் மற்றும் மின்னணு உபகரணங்களின் உற்பத்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களில் இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் தைவான் நிறுவனங்களுக்கென தனியாக உருவாக்கப்பட்டு வரும் தொழில் பூங்காவில் செமிகண்டக்டர் உள்பட பல மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தைவான் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













