தைவானில் 200 -க்கும் அதிகமான நிலநடுக்கங்கள்

April 24, 2024

தைவானின் கிழக்கு கடலோர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 240 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதில் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிட்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குனர் கூறினார். இதன்படி ஹுவாலியன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 240 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது […]

தைவானின் கிழக்கு கடலோர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 240 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அதில் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிட்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குனர் கூறினார். இதன்படி ஹுவாலியன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 240 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 3ம் தேதி இங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாகினர். 821 பேர் காயமடைந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu